கோப்புப்படம் 
கிரிக்கெட்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிற்கு திடீர் மாரடைப்பு: தீவிர சிகிச்சை

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிற்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிற்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது. லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் எதுவும் தெரியவில்லை. மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான 51 வயதான இன்சமாம் உல் ஹக், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ் தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். அவர் 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,701 ரன்களை எடுத்துள்ளார். 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,829 ரன்கள் குவித் துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் பேட்டிங் ஆலோசகர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் அணிக்காக பணியாற்றினார். அவர் 2016 மற்றும் 2019 ம் ஆண்டுகளுக்கு இடையில் அணியின் தலைமை தேர்வாளராக இருந்தார்.

1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இன்சமாம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் விரைவில் நலம்பெற அவரது ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்