கிரிக்கெட்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி அடைந்ததையடுத்து ரசிகர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரியுள்ளார். #IPL #SRK

தினத்தந்தி

கொல்கத்தா,

பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். நடப்பு சீசனில் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணி, நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

சொந்த மைதானத்திலேயே படுதோல்வியை கொல்கத்தா அணி சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில், கொல்கத்தா அணியின் மோசமான தோல்விக்கு ரசிகர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது டுவிட்டரில் ஷாருக்கான் வெளியிட்டுள்ள பதிவில், விளையாட்டு என்பது உத்வேகத்துடன் (Spirit) தொடர்புடையது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்