கிரிக்கெட்

அரசு வேலையில் இருப்பதை போல சிஎஸ்கே வீரர்கள் சிலர் எண்ணுகின்றனர் - சேவாக் பாய்ச்சல்

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு ஆட்டங்களில் நான்கில் தோல்வி கண்டுள்ள சிஎஸ்கே அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் கேதர் ஜாதவ், இக்கட்டான தருணத்தில் மந்தமாக ஆடியது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சேவாக் கூறியிருப்பதாவது:- கொல்கத்தா அணிக்கு எதிரான இலக்கை சிஎஸ்கே வீரர்கள் விரட்டியிருக்க வேண்டும். ஆனால் கேதர் ஜாதவும் ஜடேஜாவும் பந்துகளை வீணடித்து ரன்கள் எடுக்காமல் இருந்ததால் தோல்வி ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியில் விளையாடுவதை அரசாங்க வேலை போல சில வீரர்கள் எண்ணுகிறார்கள். சிறப்பாக விளையாடுகிறோமோ இல்லையோ எப்படியும் தங்களுக்குச் சம்பளம் வந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து