கிரிக்கெட்

மாலத்தீவுகள் பாரில் டேவிட் வார்னர் - மைக்கேல் ஸ்லேடர் இடையே மோதலா?

ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மாலத்தீவுகள் நாட்டில் தங்கியுள்ளனர்.

தினத்தந்தி

கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்றுள்ளனர். அங்கிருந்து ஆஸ்திரேலியா அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.

இந்த நிலையில், மாலத்தீவில் உள்ள பார் ஒன்றில் சன்ரைசர்ஸ் அணியின் முன்னணி வீரரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான டேவிட் வார்னர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான மைக்கேல் ஸ்லேடர் இடையே மோதல் நடைபெற்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியானது. இருவரும் கைகலைப்பிலும் ஈடுபட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவலை சம்பந்தப்பட்ட இருவருமே மறுத்துள்ளனர். நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் எனவே அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என இருவருமே மறுப்பு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு