கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஐ.பி.எல்: புதிய பயிற்சியாளர்களை அறிவித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிரையன் லாரா மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோரை புதிய பயிற்சியாளராக அறிவித்துள்ளது.

தினத்தந்தி

ஐதராபாத்,

அடுத்த ஆண்டுக்கான ஐ. பி. எல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு விளையாடும் வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் நடந்து முடிந்த ஐ. பி.எல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது. பிரையன் லாராவை பேட்டிங் பயிற்சியாளராகவும், டேல் ஸ்டெயினை வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் அணியின் இணைய உள்ளனர்.

முத்தையா முரளிதரன் சுழற்பந்துவீசாரளாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி பீல்டிங் பயிற்சியாளராக இருப்பார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது பணியை தொடர்வார். இவ்வாறு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு