Image Courtesy : StarSportsTwitter 
கிரிக்கெட்

ஐ.பி.எல் 2022 : கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .

இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி முதல் போட்டியில் வெற்றியும் ,இரண்டாவது போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது .

பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியது .

தோல்வியிலிருந்து மீள கொல்கத்தா அணியும் ,வெற்றியை தொடர பஞ்சாப் அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது .

இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது