Image Courtesy: @DelhiCapitals 
கிரிக்கெட்

ஐபிஎல் 2023: பாரம்பரிய உடையில் தோனி, வார்னர் - வைரலாகும் டெல்லி அணியின் தமிழ் டுவீட்...!

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சென்னையில் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேற தங்களது வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ளும் முனைப்புடன் உள்ளது.

அதே வேளையில் 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி வெற்றிக்காக போராடும். இந்த போட்டி சென்னையில் நடைபெறும் நிலையில் டெல்லி அணி தனது டுவிட்டர் பக்கத்தில் தோனி மற்றும் வார்னர் பாரம்ப்பரிய உடையான வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

மேலும் அந்த டுவிட்டர் பதிவில், வணக்கம் வாழவைக்கும் சென்னை! இன்னைக்கு மேட்ச்-க்கு ரெடியா? என பதிவிட்டுள்ளது.

தற்போது இந்த டுவிட்டர் பதிவு வைரலாக பரவி வருகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்