image courtesy: IPL twitter 
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியில் இருந்து பதிரானா விலகல்?

மதீஷா பதிரானா வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் போது தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்டார்.

தினத்தந்தி

மும்பை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் சென்னை அணியில் இடம் பிடித்துள்ள இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் போது தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்டார். காயத்தில் இருந்து மீள குறைந்தது 2 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் பதிரானா ஐ.பி.எல். தொடரில் தொடக்க கட்டத்தில் சில ஆட்டங்களை தவறவிடுகிறார். பதிரானா கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

ஏற்கனவே சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே இடதுகை பெருவிரவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. தற்போது பதிரானாவும் விலகுவது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்