image courtesy: PTI 
கிரிக்கெட்

ஐ.பி.எல்.2025: டெல்லி அணிக்கு புதிய துணை கேப்டன் நியமனம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய துணை கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் டெல்லி அணியின் புதிய துணை கேப்டனாக பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான பாப் டு பிளெஸ்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 24-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்சை எதிர்கொள்கிறது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்