கிரிக்கெட்

"விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது அற்புதமான அனுபவம்" - ஜேக்கப் பெத்தேல்

பெங்களூரு அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல், விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய அனுபவம் குறித்துப் பேசினார்.

அகமதாபாத்,

ஐபிஎல் 2026 தொடரில் ஆமதாபாத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி பெங்களூரு அணியுடன் மோதியது. இதில் டஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் அற்புதமான தொடக்கத்தை கொடுத்தார். பின்னர் விக்கெட்டுகள் விழுந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல், விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய அனுபவம் குறித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், "விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது ஒரு அற்புதமான அனுபவம். இந்தியா முழுவதும் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு நம்பமுடியாதது. அவர் விளையாடும்போது ஒவ்வொரு போட்டியும் சொந்த மைதானத்தில் (Home Game) நடப்பது போன்ற உணர்வையே தருகிறது. சின்னசாமி மைதானத்தின் ஆரவாரம் வேறு லெவல் என்றாலும், இங்கும் அதே போன்ற ஒரு சூழல் நிலவுகிறது. இது உண்மையிலேயே நம்ப முடியாத ஒன்று" என்றார்.