பெங்களூரு,
ஆர்சிபி அணியின் ஜிதேஷ் சர்மா மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட், தங்களின் பார்ட்னர்ஷிப் பவுலர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜிதேஷ் சர்மா பேசுகையில், “நாங்கள் (ஷெப்பர்ட்) சேர்ந்து ஆடும் போது, பந்துவீச்சாளர்கள் குழப்பமடைவார்கள். என்னால் பல கோணங்களில் அடிக்க முடியும். அவர் (ஷெப்பர்ட்) பலமாக அடிப்பார். இதனால் எதிரணிக்கு பீல்டிங் அமைப்பது கடினமாகிறது. அவரைப் போல பவர் பெறுவது எளிதல்ல. அதற்காக முயற்சி செய்தால் நான் கிரிக்கெட் வீரர் அல்ல, வேறு ஏதாவது ஆகிவிடுவேன்,” என்றார்.
மேலும், ஷெப்பர்ட் பேசுகையில், “அவருடன்(ஜிதேஷ் சர்மா) பேட்டிங் செய்யும்போது எனக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கும். ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்கலாம் என்ற தைரியம் வரும். அவர் அழுத்தமான சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பார். தேவையானபோது ஸ்கூப் போன்ற ஷாட்களை ஆடி போட்டியை மாற்றுவார். டி20 கிரிக்கெட்டில் அதுதான் முக்கியம்,” என்றார்.
ஐபிஎல் தொடரில் தனது அடுத்த போட்டியில் சென்னை அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது. இப்போட்டி 5-ம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.