ஐதராபாத்,
ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்னதாக ஐதராபாத் அணியின் பேட் கம்மின்ஸின் வருகை குறித்து தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா சென்றிருந்த பேட் கம்மின்ஸ், அங்கு உடற்தகுதித் தேர்வில் (Fitness Test) தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் மீண்டும் ஐதராபாத் அணியுடன் இணைந்துள்ளார். எனினும், இன்றைய சென்னைக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று வெட்டோரி உறுதிப்படுத்தினார்.
"கம்மின்ஸ் ஏப்ரல் 25-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் களமிறங்குவார்" என பயிற்சியாளர் தெரிவித்தார்.
தொடர் வெற்றிகளைத் தக்கவைக்க சென்னை அணியும், சொந்த மண்ணில் ஆதிக்கத்தைச் செலுத்த ஐதராபாத் அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.