சென்னை,
ஐபிஎல் 2026 சீசன் அதிரடியுடன் தொடங்கியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலேயே ரன்கள் மழையாக குவிந்துள்ளன.
முதல் போட்டியில் பெங்களூரு அணி 202 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்தது. இரண்டாவது போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை 221 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் அணி, சென்னை அணியை 127 ரன்களில் கட்டுப்படுத்தி, அந்த இலக்கை வெறும் 73 பந்துகளில் அடித்தது.
இந்த 3 போட்டிகளையும் பார்க்கும்போது, ஐபிஎல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. புள்ளிவிவரங்களும் அதையே காட்டுகின்றன. 3 போட்டிகளில் மொத்தம் 1103 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், 61 சிக்ஸர்கள். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 20 சிக்ஸர்கள், 367 ரன்கள் அடிக்கப்படுகின்றன. ஆனால் இதில் வியப்பான விஷயம் என்னவென்றால், இவ்வளவு ரன்கள் அடிக்கப்பட்டாலும், ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருதுகள் பவுலர்களுக்கே கிடைத்துள்ளன.
1. ஜேக்கப் டப்பி (பெங்களூரு): ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2. ஷர்துல் தாகூர் (மும்பை): கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
3. நாண்ட்ரே பெர்கர் (ராஜஸ்தான்): சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.