புது டெல்லி,
2026 ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற தவறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அடுத்த சீசனிக்காக தனது அணியில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.யுள்ளன.
அக்சர் படேல் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி, இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்தது. கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற போதிலும், பிளே-ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தொடரை முடித்தது.
இதையடுத்து, 2027 ஐபிஎல் சீசனுக்கான அணிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சில வீரர்களை விடுவிக்க டெல்லி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, ரூ.34.50 கோடி மதிப்புள்ள கீழ்க்கண்ட 5 வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குல்தீப் யாதவ் - ரூ.13.25 கோடி
டி. நடராஜன் - ரூ.10.75 கோடி
முகேஷ் குமார் - ரூ.8.00 கோடி
கருண் நாயர் - ரூ.50 லட்சம்
ரெஹான் அகமது / பென் டக்கெட் - ரூ.2.00 கோடி
எனினும், வீரர்களை விடுவிப்பது தொடர்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.