சண்டிகர்,
ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயணம் ரசிகர்களை ஆச்சரியத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தொடரின் ஆரம்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் 7 போட்டிகளில் 6 வெற்றிகளையும், ஒரு போட்டி மழையால் ரத்தானதையும் சேர்த்து தோல்வியின்றி பயணித்தது.
ஆனால் தொடரின் இரண்டாம் பாதியில் பஞ்சாப் அணி தொடர் தோல்வியை சந்தித்தது. 6 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த பஞ்சாப் கிங்ஸ், வெற்றிப் பாதையில் இருந்து விலகியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் ஏற்பட்ட தடுமாற்றம் அணியின் பின்னடைவை அதிகரித்தது.
இதன் காரணமாக பிளேஆப் சுற்றுக்கான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பின்தங்கியது. ஒரு கட்டத்தில் கோப்பையை வெல்லும் என கருதப்பட்ட அணி, இறுதியில் நாக்அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
தோல்வியறியா தொடக்கத்துடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அணி, பிளேஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.