ஐதராபாத்,
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.
இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 67வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதரபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்று ஹெட் அபார தொடக்கம் கொடுத்தனர். அப்போது ஹெட் 26(16) ரன்கள் அடித்து அவுட்டானார். பின்னர் அபிஷேக்குடன் கிஷன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளே முடிவில் 63/1 ரன்கள் எடுத்தது. அப்போது அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா தனது அரைசதத்தை கடந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்ட்டநிலையில், 56(22) ரன்களில் அவுட்டானார். பின்னர் இணைந்த கிஷன் - கிளாசன் ஜோடி பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தது. அப்போது கிஷன் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து கிளாசனும் தனது அரைசதத்தை கடந்தநிலையில், 51(24) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி சந்தித்த முதல் 2 பந்துகளை சிக்சருக்கு விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஐதராபாத் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களுரு களமிறங்க உள்ளது.