பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நாளை முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. நாளை தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில், பெங்களுரு அணிக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.