சென்னை,
ஐ.பி.எல். போட்டியின் 10வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்பொழுது, கடந்த முறை நாங்கள் விளையாடியபொழுது இருந்த மேற்பரப்பினை விட இந்த முறை நல்ல முறையில் உள்ளது.
எங்களுக்கு வெற்றி பெற ரன்கள் அதிகம் தேவை. கிறிஸ்டியன் விளையாடவில்லை. ஆனால், ரஜத் படிதர் எங்கள் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் சுழற்பந்து வீசுவதில் திறமையானவர் என்று கூறியுள்ளார். கடந்த முறை பெற்ற தோல்விகளை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் இதனை ஒரு போட்டியாக மட்டுமே கவனத்தில் கொண்டு நாங்கள் விளையாடுவோம் என்றும் கோலி கூறியுள்ளார்.