கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி 158 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 26வது ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசரஸ் ஐதராபாத் அணி மோதுகிறது. இன்றைய ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இந்நிலையில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய 5வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ், கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதற்கடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். நிலைத்து நின்று ஆடிய டேவிட் வார்னர்(48 ரன்கள்), 15வது ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்ச்சில் பவுல்ட் ஆனார். மறுபுறம் அரைசதத்தை கடந்த மனீஷ் பாண்டே(54 ரன்கள்) உனட்கட் வீசிய 18வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. கேன் வில்லியம்சன்(22 ரன்கள்) மற்றும் பிரியம் கர்க்(10 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்