கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

14-வது ஐபிஎல் சீசனில் டெல்லியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி ஐதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் முதலாவதாக களாமிறங்கினர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 7 (5) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, மெதுவாக ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியில் மணிஷ் பாண்டே 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் 50 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தநிலையில் 57 (55) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக மணிஷ் பாண்டேவும் 61(46) ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசியில் அதிரடி காட்டிய கேன் வில்லியம்சன் 26(10) ரன்களும், கேதர் ஜாதவ் 12 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக நிகிடி 2 விக்கெட்டுகளும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு