கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

ஐ.பி.எல். மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று துவங்கியது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

4 முறை (2013, 2015, 2017, 2019) கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2010-ம் ஆண்டில் மட்டுமே இறுதிப்போட்டியில் தோல்வியை (சென்னையிடம்) சந்தித்தது. மற்றபடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற எல்லா தடவையும் வெற்றி வாகை சூடி அசத்தி இருக்கிறது.

8 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணி தொடரின் தொடக்கத்தில் வீறு நடைபோட்டது. ஆனால் தற்போது சற்று தடுமாறுகிறது. முதலாவது தகுதி சுற்று உள்பட கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

அதிக முறை கோப்பையை வென்று இருக்கும் மும்பை அணி 5-வது முறையாக மகுடம் சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு