கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சரிவில் இருந்து மீளும் முனைப்பில் ஐதராபாத் அணி..!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோத உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 வெற்றி, 5 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. டெல்லியை பொறுத்தவரை வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்திக்கிறது. செயல்பாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அந்த ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ், ரிஷாப் பண்ட், ரோமன் பவெல், அக்ஷர் பட்டேல் பேட்டிங்கில் ஓரளவு நன்றாக ஆடினர். ஆனால் தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

இது குறித்து தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறுகையில், பிளே-ஆப் சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேற எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். ஏறக்குறைய எங்களை போன்று புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் வலுவான போட்டியில் உள்ளன. இவ்விரு அணிகளுடன் நாங்கள் மோத உள்ளோம். இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து விட்டால் எங்களது கை ஓங்கி விடும். அதன் பிறகு டாப்-4 இடத்திற்குள் சென்று விடுவோம். கடந்த ஆட்டத்தில் நானும், பிரிவித் ஷாவும் எளிதாக வீழ்ந்து விட்டோம். இந்த ஆட்டத்தில் பவர்-பிளேயில் உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். டாப்-3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் 80 அல்லது 90 ரன்கள் எடுத்து விட்டால் பெரிய ஸ்கோர் குவித்து விடலாம் என்றார்.

இதே போல் ஆல்-ரவுண்டர்கள் லலித்யாதவ் (9 ஆட்டத்தில் 137 ரன் மற்றும் 4 விக்கெட்), ஷர்துல் தாக்குரிடம் (89 ரன் மற்றும் 7 விக்கெட்) இருந்து இதுவரை மெச்சும்படியான பங்களிப்பு இல்லை. அணியில் இடத்தை தக்கவைக்க அவர்கள் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. கடந்த இரு ஆட்டங்களில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்சிடம் தோல்வி கண்டது. இவ்விரு ஆட்டங்களிலும் ஐதராபாத்தின் அசுரவேக பந்து வீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்தனர்.

இப்போது சரிவில் இருந்து எழுச்சி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பேட்டிங்கில் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா, திரிபாதி, மார்க்ராம், பூரன், பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், நடராஜன், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் ஒருசேர மிரட்டினால் போதும். ஐதராபாத் மறுபடியும் கோலோச்ச தொடங்கி விடும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்