கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் வெற்றி இலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

தினத்தந்தி

ஆமதாபாத்,

ஐபிஎல் டி-20யில் பஞ்சாப்-கொல்கத்தா மோதும் ஆட்டம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்களும், கிறிஸ் ஜோர்டான் 30 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணியின் சார்பில் நிதீஷ் ராணா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்