கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு 166 ரன்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். நட்சத்திர வீரர் படிக்கல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பவர்பிளே முடிவில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் சாஹர், டிரென்ட் போல்ட் மற்றும் ஆடம் மில்னே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.