கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தான்-ஐதராபாத் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது.

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கு அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று(திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 65 ரன் வித்தியா சத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அதன் பிறகு 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும் பணிந்தது.

ராஜஸ்தான் அணி தனது முதல் 4 ஆட்டங்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையையும், 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 27 ரன் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூவையும் வரிசையாக வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் 12 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.