கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 33வது ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் அணியின் சார்பில் ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியான துவங்கிய இந்த ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் 15(19) ரன்களும், அவரைத்தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய உத்தப்பா 41(22) ரன்களும், அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 9(6) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக கேப்டன் ஸ்டீவன் சுமித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஆடிய இந்த ஜோடியில் ஜோஸ் பட்லர் 24(25) ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவன் சுமித் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 57(36) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் 2(3) ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தேவாட்டியா 19(11) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்