கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 37 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

துபாய்,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 25வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. பெங்களுரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி (90 ரன்கள்) எடுத்தார். இதனை தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.

சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன், டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் டூ பிளஸ்சிஸ் 8(10) ரன்களும், ஷேன் வாட்சன் 14(18) ரன்களும், அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஜெகதீசன் 33(28) ரன்களும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டோனி 10(6) ரன்னிலும், சாம் கரன் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்ததடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மறுமுனையில் சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த அம்பத்தி ராயுடு 42 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பிராவோ 7(5) ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 7(6) ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் தீபக் சாஹர் 5(5) ரன்களும், ஷர்துல் தாகூர் 1(1) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும், உதானா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது