ஷார்ஜா,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 28-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 33 பந்துகளில் 6 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 73 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் டாம் பாண்டன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் டாம் பாண்டன் 8(12) ரன்களும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 9(14) ரன்களும், சுப்மன் கில் 34(25) ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 1(2) ரன்னும், மோர்கன் 8(12) ரன்னும், ரசூல் 16(10) ரன்னும், பேட் கம்மின்ஸ் 1(3) ரன்னும், ராகுல் திரிபாதி 16(22) ரன்களும், நாகர்கோட்டி 4(7) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் வருண் சக்ரவர்த்தி 7(10) ரன்னும், கிருஷ்ணா 2(3) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் மோரிஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், சைனி, சாஹல் மற்றும் உதானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.