கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. சாம்பியன் யார்? என்பதை அறிய இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் 8 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பெற்ற டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சிடம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடித்திருந்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியினர் பந்து வீச்சைத் துவங்க உள்ளனர்.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் வருமாறு:-

ஐதராபாத்: வார்னர் (கேப்டன்), ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பிரியம் கார்க், ஜாசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷித்கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.

டெல்லி: ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஹெட்மயர், ரிஷாப் பண்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹர்ஷல் பட்டேல் அல்லது பிரித்வி ஷா, அக்ஷர் பட்டேல், அஸ்வின், ரபடா, நோர்டியா.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து