அபுதாபி,
கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த புதன்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக ஐதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரும், அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இருப்பினும் திட்டமிட்டபடி அன்றைய தினம் ஆட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியான நடராஜனுக்கு பதிலாக உம்ரன் மாலிக் ஐதராபாத் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஏ பிரிவு மற்றும் இருபது ஓவர் போட்டி ஒன்றில் விளையாடி உள்ளார். உம்ரன் மொத்தம் 4 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். இதுதவிர, ஐதராபாத் அணியின் ஒரு பகுதியாக அவர் வலை பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். எனினும், நடராஜன் குணமடைந்து திரும்பும் வரையே உம்ரன் அணியில் விளையாட அனுமதிக்கப்படுவார்.