கிரிக்கெட்

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது மும்பை இந்தியன்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையித்தது. #IPL #MI #DD

மும்பை,

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றுவரும் 9-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கௌதம் கம்பீ மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த போதிலும், கடந்த 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது, அந்த அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய இந்த போட்டியில், மும்பை அணியின் இன்னிங்சை எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் துவக்கினர். முதல் ஓவரிலேயே 15 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை இந்த ஜோடி துவக்கியது. இவாகளின் அதிரடி ஆட்டத்தின் மூலம மும்பை அணி 50 ரன்களை 4 ஓவாகளிலேயே தொட்டது. பின்னா வந்த முகமது ஷமி பந்தையும் மைதானத்தின் நாலபுறமும் இந்த ஜோடி சிதறடித்தது. இதனால் 5 ஓவாகள் முடிவில் 66 ரன்கள் எடுத்து விக்கெட்டு இழக்காமல் மும்பை அணி விளையாடி வந்ததது. அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது.

அதிரடியாக ஆடிய சூர்யகுமாருடன்53(32 பந்து,7 பவுண்டரி,1 சிக்சா) ராகுல் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னா கேப்டன் ரோஹித் சர்மா களம் கண்டார். இஷான் கிஷான் 44(23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சா) ரன்களில் ஆட்டமிழந்தார். மளமளவென ரன்களை சேர்த்து அரைசதத்தை நெருங்க டேனியல் கிறிஸ்டியன் பந்தில் போல்டு ஆனார் இஷான் கிஷான். பின்னா களமிரங்கிய அதிரடி ஆட்டகாரரான பொல்லார்டும் கிறிஸ்டியன் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

ட்ரெண்ட் பவுல்ட் பந்தில் கேப்டன் ரோஹித் சர்மா (18 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதனை தொடாந்து நட்சத்திர ஆட்டகாரா ஹார்டிக் பாண்டியாவுடன் கிருனல் பாண்டியா இணைந்தார். இருவரும் கடைசி தருவாயில் தடுமாறி அவுட்டாக, மும்பை அணியின் ரன்வேகத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்