Image : IPL  
கிரிக்கெட்

ஐபிஎல்: தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கும், அவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும் மாற்றம்

விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 26-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 26-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் 2022-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது . அதேபோல் 2022-ம் ஆண்டு முதல் லக்னோ அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

தேவ்தத் படிக்கல்  ராஜஸ்தான் அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி 637 ரன்கள் எடுத்துள்ளார் .

அவேஷ் கான்  22 போட்டிகளில் லக்னோ அணிக்காக விளையாடி 26 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு