கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் தோனி அடுத்தடுத்து சாதனை

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி அடுத்தடுத்து சாதனைகளை படைத்து உள்ளார்.

தினத்தந்தி

அபுதாபி,

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

போட்டியில் டாஸ் போடும்பொழுது டேனி மோரீசன், ஐ.பி.எல்.லில் தோனிக்கு இது 200வது போட்டி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் கூறினார்.

இதுபற்றி தோனி மோரீசனிடம் கூறும்பொழுது, நீங்கள் கூறிய பின்னரே அதுபற்றி (ஐ.பி.எல்.லில் 200வது போட்டி) எனக்கு தெரிய வந்தது. நல்லது என்று உணர்கிறேன். ஆனால் அதேவேளையில், அது வெறும் எண்களே. நீண்ட காலம் ஆக பல காயங்கள் ஏற்படாமல் விளையாடி வருகிறேன் என்பதே அதிர்ஷ்டவசம் என நான் உணர்கிறேன் என்று கூறினார்.

தோனி தனது ஐ.பி.எல். பயணத்தில், 2 அணிகளில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளார். ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மற்றொன்று ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி (சென்னை அணி 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்ட காலத்தில்) ஆகும்.

இதன்பின்னர், போட்டியில் விளையாடிய தோனி மற்றொரு சாதனையையும் படைத்து உள்ளார். அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 4 ஆயிரம் ரன்களை பதிவு செய்துள்ளார். இதேபோன்று சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தனது 50வது கேட்ச்சை பிடித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்