பெங்களூரு,
2025 ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வென்று அசத்தியது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல் - மந்திரி டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசினர். இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரின் க்கியமான பிளே-ஆஃப் சுற்றின் ஒரு போட்டி மற்றும் இறுதிப்போட்டி இங்கு நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்சிபி அணி தனது 7 உள்ளூர் (Home) போட்டிகளில் 5 போட்டிகளைச் சின்னசாமி மைதானத்தில் விளையாடும். மீதமுள்ள 2 போட்டிகள் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.