கொல்கத்தா,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண் டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கி ழமை) நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந் திக்கிறது.
3 முறை சாம்பியனான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக் கெட் வித்தியாசத்தில் மும்பையிடமும், அடுத்த ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்திடமும் தோற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டதால் புள்ளி கணக்கை தொடங்கியது.
லக்னோ அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத் தில் டெல்லியிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியா சத்தில் ஐதராபாத்தை சாய்த்தது.
முதல் வெற்றியை பதிவு செய்ய கொல்கத்தா அணி தீவிர முயற்சி மேற் கொள்ளும். அதேநேரத்தில் உத்வேகத்தை தொடர லக்னோ அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக் காது.
இந்த நிலையில், இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மழை காரணமாக இரு அணிகளும் கொல்கத்தா mபயிற்சியை முன்கூட்டியே முடித்தனர் என்பது குறிப்பிடத்க்கது.