கிரிக்கெட்

‘ஐ.பி.எல். போட்டியை அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும்’; இந்திய முன்னாள் வீரர் காவ்ரி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல என்றார்.

தினத்தந்தி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி நேற்று அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவில் ஓராண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது வேறு நாட்டிலோ நடத்தியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவில் அல்ல. இந்தியாவில் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்தியிருக்கக்கூடாது. கடந்த ஆண்டை போலவே அமீரகத்தில் போட்டியை நடத்தும் முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்