கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி: ஒரே நாளில் 2 சாதனைகளை ஏற்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி

கிளென் மேக்ஸ்வெல்லின் 260 பந்துகளில் 500 ரன்கள் என்று இதுவரை வைத்திருந்த சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்து உள்ளார்.

லக்னோ

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

அவர் 8 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், ஒட்டு மொத்த அளவில் ஐ.பி.எல். போட்டிகளில் 227 பந்துகளில் 500 ரன்களை விரைவாக எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால், கிளென் மேக்ஸ்வெல்லின் 260 பந்துகளில் 500 ரன்கள் என்று இதுவரை வைத்திருந்த சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்து உள்ளார்.

இதுதவிர, மிக குறைந்த வயதில் (15 வயது) ஐ.பி.எல். போட்டிகளில் 500 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு பிருத்வி ஷா (19 வயது) ஐ.பி.எல். போட்டிகளில் 500 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. இன்று ஒரே நாளில் வைபவ் சூர்யவன்ஷி இரண்டு சாதனைகளை ஏற்படுத்தி உள்ளார்.