கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் : பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL #RajivShukla

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்-20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டு, ஏப்ரல் மாதத்தில் துவங்கிய 11-வது ஐபிஎல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. வழக்கமாக இரவு 8 மணிக்கு ஐபிஎல் போட்டிகள் துவங்குகின்றன. 8 மணிக்கு துவங்கும் போட்டிகள் முடிவடைவதற்கு நள்ளிரவு 12 மணி வரை ஆகிறது. இதனால், ரசிகர்கள் போட்டி முடிந்து வீடு திரும்புவது உள்பட சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

ரசிகர்களின் கஷ்டத்தை மனதில் கொண்டு ஐபிஎல் 2018 பிளே ஆப் சுற்றுகளின் நேரத்தை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியுள்ளது. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா இது பற்றி தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறுகையில், பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் மாலை 7.00 மணிக்குத் தொடங்கும், 8 மணி போட்டிகள் முடிவடைய கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணி வரை ஆவதால் தொலைக்காட்சி நேயர்கள், மைதானப் பார்வையாளர்கள் ஆகியோரின் மறுநாள் காலை பணிகளைக் கருத்தில் கொண்டு 7 மணிக்கு மாற்றம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் மே 22 மற்றும் 25 ஆம் தேதிகளிலும் இறுதிப்போட்டி 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. முதலில் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் புனேயில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் காவிரிப் பிரச்சினையால் ஐபிஎல் எதிர்ப்புகள் கிளம்ப சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. இதனையடுத்து பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு