கவுகாத்தி,
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், கெய்க்வாட் இருவரும் தலா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆயுஷ் மாத்ரே (0), ஷார்ட் (2), சர்ப்ராஸ் கான் (17), சிவம் துபே (6) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
சென்னை அணி தரப்பில் ஓவர்டன் பொறுப்புடன் விளையாடி, அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஓவர்டன், பர்கர், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.