கிரிக்கெட்

ஐபிஎல்: தீவிர பயிற்சியில் ரோகித் சர்மா

10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், மும்பை அணி வீரர் ரோகித் சர்மா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை மும்பை அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் 29ம் தேதி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.