image courtesy: PTI  
கிரிக்கெட்

ஐ.பி.எல்: லக்னோ அணியில் டேவிட் வில்லிக்கு பதிலாக மாற்று வீரர் சேர்ப்பு

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் வில்லி நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி விட்டார்.

தினத்தந்தி

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி தனிப்பட்ட காரணத்துக்காக அணியில் இருந்து விலகி விட்டார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியை அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த காலங்களில் அவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளில் அங்கம் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்