கிரிக்கெட்

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதன்படி ராஜஸ்தான் அணியினர் பந்துவீச்சைத் துவங்க உள்ளனர்.

இவ்விரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வி என்று 6 புள்ளியுடன் ஒரே நிலைமையில் உள்ளன. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும். அந்த வகையில் இரு அணிக்குமே இது வாழ்வா-சாவா ஆட்டம்தான்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை