கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடக்க போட்டியை நேரில் காண பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி புறப்பட்டார்

ஐ.பி.எல். தொடக்க போட்டியை நேரில் காண்பதற்காக பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி புறப்பட்டு சென்றார்.

தினத்தந்தி

அபுதாபி,

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் முதல் போட்டியாக இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகின்றன. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் சொகுசு பேருந்துகளில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதேபோன்று, ஐ.பி.எல். தொடக்க போட்டியை நேரில் காண்பதற்காக பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி, பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் ஸ்டேடியத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?