Image Courtesy; @KKRiders  
கிரிக்கெட்

ஐ.பி.எல்; மைதானத்தில் கிரிக்கெட் உபகரணங்களுக்கு பூஜை செய்து பயிற்சியில் இறங்கிய கொல்கத்தா அணி

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

தினத்தந்தி

கொல்கத்தா,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தேங்காய், உடைத்து, பூஜை செய்து ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணியில் இணைந்தார். அந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தற்போது அதே போல் கொல்கத்தா அணியினர் பயிற்சியை தொடங்கும் முன்னர் கிரிக்கெட் உபகரணங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து பயிற்சியை தொடங்கி உள்ளனர். தற்போது இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்