கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடக்க போட்டியை 20 கோடி பேர் கண்டு களித்து சாதனை

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். தொடக்க போட்டியை 20 கோடி பேர் கண்டு களித்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் மோதின. டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி தொடக்கத்தில் சரிவை நோக்கி சென்றபோதிலும் பின்னர் நிலைத்து ஆடியது.

சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொரோனா அச்சத்தால் இந்த ஐ.பி.எல். தொடரில் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கேலரிகள் வெறுமையாக காட்சி அளித்தது. இருப்பினும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பவுண்டரி, சிக்சர்கள் அடிக்கப்பட்ட போது மைதானத்தில் உள்ள மெகாதிரையில் ரசிகர்களின் கரவொலி ஆர்ப்பரிப்பும், நடன அழகிகளின் நடனமும் அடங்கிய பழைய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இந்நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் புதிய சாதனையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் 20 கோடி பேர் தொலைக்காட்சி வழியே போட்டியை கண்டு ரசித்து உள்ளனர் என பி.ஏ.ஆர்.சி. இந்தியா தெரிவித்து உள்ளது. (இந்த அமைப்பு தொலைக்காட்சி பார்வையாளர் அளவை கணக்கிட்டு தெரிவிக்கும்). எந்த நாட்டிலும் இதுவரை நடந்த எந்த தொடக்க ஆட்டத்திற்காகவும் இந்த அளவு பார்வையாளர்கள் எண்ணிக்கை இருந்ததில்லை. எந்த போட்டியும் பெரிய அளவில் இதுபோல் தொடங்கியதில்லை என்று தெரிவித்து உள்ளார்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் ஓர் அணிக்காக ஐ.பி.எல்.லில் 100வது வெற்றியை பெற்ற கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். கடந்த 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பைக்கெதிராக இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்