Image Courtesy: Twitter  
கிரிக்கெட்

ஐ.பி.எல்; கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கிற்கு பேட் பரிசளித்த விராட் கோலி - வீடியோ

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

தினத்தந்தி

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூர் தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 83 ரனகள் எடுத்தார்.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் விராட் கோலி மெதுவாக விளையாடியதே பெங்களூரு தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்ததாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்தவுடன் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கிற்கு பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலி பேட் பரிசளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்