சென்னை,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். கெய்குவாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன்சியில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள கெய்க்வாட், பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார்.
இந்த நிலையில், உங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது கேப்டன்சியா? பேட்டிங்கா? என ருதுராஜ் கெய்க்வாட்டிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு அவர் யாரும் எதிர்பாரா விதமாக கலகலவென பதிலளித்துள்ளார். அதாவது, தனக்கு கேப்டன்சி மற்றும் பேட்டிங்கை விட, டாஸ் போடுவதுதான் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது என ஜாலியாக அவர் பதிலளித்துள்ளார்.