* வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா அளித்த ஒரு பேட்டியில், விராட்கோலியின் பேட்டிங் திறமை நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. அவர் ஆட்டத்தில் தீவிரமான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். கால்பந்து ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறாரோ? அதற்கு நிகராக கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விராட்கோலியின் செயல்பாடு இருக்கிறது. அவரது உடல் தகுதியும், மனவலிமையும் பார்க்க வியப்பாக உள்ளது. உலக கோப்பை இறுதிப்போட்டி மற்றும் இந்த சீசனில் ஆஷஸ் போட்டி தொடரில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆடிய விதம் பாராட்டுக்குரிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.