image courtesy:PTI 
கிரிக்கெட்

எனது கணவரை தவிர அணியில் உள்ள மற்ற அனைவரும் தீய செயல்களில்... - ஜடேஜாவின் மனைவி சர்ச்சை கருத்து

ஜடேஜாவின் மனைவி குஜராத்தில் மந்திரியாக உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவரின் மனைவி, ரிவாபா ஜடேஜா. இவர், தற்போது குஜராத்தில் மந்திரியாக உள்ளார்.

இந்நிலையில் தனது கணவரின் ஒழுக்கத்தை குறிப்பிட்டு பேசுகையில் பிற இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய ரிவாபா, எனது கணவர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் விளையாட லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும் இன்றுவரை, அவர் தனது பொறுப்புகளைப் புரிந்துகொண்டதால், எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபட்டதில்லை.

அதேநேரத்தில், அணியில் உள்ள மற்ற அனைவரும் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து எந்த தடையும் இல்லை. நாம் வாழ்க்கையில் முன்னேறியவுடன் நமது கலாசார வேர்களை நினைவில் கொள்வதும் முக்கியம் என்று கூறினார்.

அவருடைய இந்த கருத்து பலரது மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து