ஜோகன்னஸ்பர்க்,
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாளான நேற்று இந்தியா தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடி வந்தது.
இதில், பும்ரா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சென் அடுத்தடுத்து பவுன்சர் பந்துகளை வீசி மிரட்டினார். இதனால் ஒரு பந்து பும்ராவின் உடலையும் பதம் பார்த்தது.
முந்தைய நாள் இந்திய பந்துவீச்சில் நெஞ்சில் அடி வாங்கிய ஜான்சென் அதற்கு பதிலடி கொடுத்து விட்டது போல் ஏதோ திட்டினார். இதனால் கோபமடைந்த பும்ராவும் வார்த்தைகளை உதிர்க்க இருவரும் நெருங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு நடுவர் தலையிட்டு சமாதானப் படுத்தினார்.